30 April 2011

தேனீ – சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி !


அருள்மறைக் குர்ஆனில் அல்லாஹ், தேனீக்களை சிந்திக்கும் மக்களுக்கு அத்தாட்சி எனக் குறிப்பிடுகின்றான். அத்தோடு நாம் அதனை அல்லாஹ்வின் அத்தாட்சியாக கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றான். அருள்மறை குர்ஆனில் 16–வது அத்தியாயத்தில் தேனீக்களை பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான். தேனீக்கள் நமக்காக தேனை உருவாக்குகின்றன என்பதும், அந்தத் தேனை உருவாக்குவது எப்பை என்றும் வல்ல அல்லாஹ் தேனீக்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறான் என்றும், மேற்படி வசனத்தில் வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

“ உம் இறைவன் தேனீக்கு, அதன் உள்ளுணர்வை அளித்தான். நீ மலைகளிலும், மரங்களிலும், உயந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் ( என்றும் ) பின், நீ எல்லாவிதமான கனிகளின் மலர்களிலிருந்தும் உணவருந்தி, உன் இறைவன் ( காட்டித் ) தரும் எளிதான வழிகளில் ( உன் கூட்டுக்குள் ) ஒடுங்கிச்செல் ( என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான் ). அதன் வயிற்றிலிருந்து பலவிதா நிறங்களுடைய ஒரு பானம் ( தேன் ) வெளியாகிறது, அதில் மனிதர்களுக்கு ( பிணி தீர்க்கவல்ல ) சிகிச்சை உண்டு. நிச்சியமாக, இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
( திருக்குர்ஆன்- 16:68,69 )



              எப்படி தேனை உருவாக்க வேண்டும் என்று தேனீக்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தது பற்றி, அருள்மறை குர்ஆனின் வசனத்தில் குறிப்பிட்டது போன்று, கறையான்களுக்கும் அல்லாஹ்வே எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கிறான்.வல்ல அல்லாஹ்வே பார்வை அற்ற இந்த உயிரினங்களுக்கும், அவைகள் தொடர்பு கொள்ளக்கூடிய முறைகளை பற்றியும் அறிவித்து, இலட்சக்கணக்கான கறையான்களில் ஒவ்வொன்றுக்கும், அவைகளின் கூடுகளில் செய்ய வேண்டிய அனைத்தையும் கற்றுக்கொடுக்கிறான். என்பதும் நாம் பெரும் தெளிவு.

அருள் மறை குர்ஆனில் அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்
“      மனிதர்களே ! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களை சிந்தித்துப்பாருங்கள், வானத்திலும், பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வையன்றி ( வேறு ) படைப்பாளன் இருக்கிறானா?. அவனையன்றி வேறு நாயன் இல்லை, அவ்வாறு இருக்க, ( இவ்வுண்மையை விட்டும் ) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள். “
( திருக்குர்ஆன்- 35:3  )

இவ் ஆக்கத்தின் முழு உரிமையாளர் முஹம்மத் அஸ்ரின்.

நன்றி Dr.ஹாருன் யஹ்யா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
எனது வெப் தளத்திற்கு விஜயம் செய்தமைக்கு மிக்க நன்றி ! . இங்கு வழங்கப்பட்டிருக்கும் Download க்கு Bit Torrent மென்பொருள் அவசியமாகும் . எனவே Bit Torrent இன் புதிய பதிப்பை Download செய்ய இந்த இணைப்பை அழுத்தவும்.Download Bit Torrent Adobe Flash 10 player required. Download Now © Beat of Feed! --------------------------------------------------------