பறக்கீத் என்று அழைக்கப்படும் ஒரு வகை நீண்ட சிறகுகள் கொண்ட சிறு கிளிகள் ஆஸ்திரேலியாவில் அதிகம் மழை இல்லாத சமவெளியில் உயிர் வாழும் படைப்பினமாகும். இவ்வகை பறவை இனம், தாங்கள் உணவாக உட்கொள்ளும் தாவர விதைகளில் இருந்து தமக்குரிய தண்ணீரை பெற்றுக்கொண்டலும், அதிகம் தண்ணீர் இல்லாத கோடை காலங்களில், 30 நாட்கள் வரை தண்ணீர் அருந்தாமலேயே உயிர் வாழக்கூடிய திறன் கொண்டவையாகும். காடுகளில் வாழும் பறவை இனமான இந்த சிறு கிளிகள் உட்பட்ட உயிரினங்கள் அனைத்தும் உயிர் வாழத் தண்ணீர் அத்தியவசியமனதகும். இதன் காரணத்தால், இந்த சிறு பறவை இனம் தாம் வாழும் தட்ப வெப்பச் சூழலுக்கு ஏற்ப, தங்களது தேவைகளையும், அதற்கான சூழ்நிலைகளையும் அமைத்துக்கொள்கின்றன. உதாரணத்திட்கு தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் அவை முட்டை இட்டு குஞ்சு பொறிப்பதை நிறுத்திட்கொண்டு, தண்ணீர் இருக்கும் புதிய இடம் ஒன்றை தேட துவங்குகின்றன. தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டு கொண்டதும், அங்கு கூடு கட்டி, முட்டை இட்டு அடைகாக்கத் துவங்குகின்றன.
அல்லாஹ் இந்தப் படைப்பினங்களுக்கு வழங்கி இருக்கும் அறிவின் மூலம், இந்த நீண்ட சிறகுகள் கொண்ட சிறு கிளிகள், தாங்கள் வாழும் சமவெளிகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்பத் தங்களது வாழ்கை முறைகளை அமைத்துக்கொள்கின்றன. அவைகளின் இனம் பெருக வேண்டியது அவசியம் தான் என்றாலும், இந்த வகை பறவை இனங்கள் எவ்வித பேராபத்தான சூழலுக்கு ஆளாவதை விரும்புவதில்லை என்பதால், இனப்பெருக்கம் செய்வதை உடனடியாக நிறுத்தி விடுகின்றன.
இவ்வுலகைப் படைத்தது, இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் படைத்தது , அவன் படைத்த உயிரினங்கள் அனைத்தையும் பற்றி அறிந்த வல்ல அல்லாஹ், இந்த பறவை இனங்களுக்கு அறிவுடன் செயல்படும் ஆற்றலை வழங்கினான். வல்ல அல்லாஹ் இது போன்ற பறவை இனங்களுக்கு வழங்கியிருக்கும் ஆற்றல்கள், வல்ல அல்லாஹ்வின் படைப்பாற்றலுக்கு அததட்சியாக இருந்து, வல்ல அல்லாஹ்வின் அற்புத படைப்பாற்றலை நமக்கு பறைசாற்றி நிற்கின்றன. இத்தகைய ஆற்றல்களை வழங்கிய அல்லாஹ்வை, அனைத்து உயிரினங்களும் துதி செய்கின்றன என்பதை, அருள் மறை குர்ஆனில் வசனம் குறிப்பிடுவதை சிந்தித்துப் பாருங்கள்.
" ஏழு வானங்களும் பூமியும் , அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர். இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் ( எதுவும் ) இல்லை. எனினும் அவை துதி செய்வதை நீங்கள் உணர்து கொள்ளமாட்டீர்கள் நிச்சியமாக, அவன் பெருமையுடயவனாகவும் , மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். "
( திருக்குர்ஆன் - 17 :44 )
நன்றி டாக்டர் ஹருண் யஹ்யா

