அருள்மறைக் குர்ஆனில் அல்லாஹ், தேனீக்களை சிந்திக்கும் மக்களுக்கு அத்தாட்சி எனக் குறிப்பிடுகின்றான். அத்தோடு நாம் அதனை அல்லாஹ்வின் அத்தாட்சியாக கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றான். அருள்மறை குர்ஆனில் 16–வது அத்தியாயத்தில் தேனீக்களை பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான். தேனீக்கள் நமக்காக தேனை உருவாக்குகின்றன என்பதும், அந்தத் தேனை உருவாக்குவது எப்பை என்றும் வல்ல அல்லாஹ் தேனீக்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறான் என்றும், மேற்படி வசனத்தில் வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
“ உம் இறைவன் தேனீக்கு, அதன் உள்ளுணர்வை அளித்தான். நீ மலைகளிலும், மரங்களிலும், உயந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் ( என்றும் ) பின், நீ எல்லாவிதமான கனிகளின் மலர்களிலிருந்தும் உணவருந்தி, உன் இறைவன் ( காட்டித் ) தரும் எளிதான வழிகளில் ( உன் கூட்டுக்குள் ) ஒடுங்கிச்செல் ( என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான் ). அதன் வயிற்றிலிருந்து பலவிதா நிறங்களுடைய ஒரு பானம் ( தேன் ) வெளியாகிறது, அதில் மனிதர்களுக்கு ( பிணி தீர்க்கவல்ல ) சிகிச்சை உண்டு. நிச்சியமாக, இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
( திருக்குர்ஆன்- 16:68,69 )





